பங்குனி உத்திர ரத ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பதா? சிவக்குமார் கண்டனம்

0
7

கோலாலம்பூர், மார்ச் 10-

செந்துல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் பங்குனி உத்திர ரத ஊர்வலத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் அனுமதி வழங்க மறுத்தது குறித்து பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெக தேசிய துணை செயலாளருமான சிவக்குமார் வருத்தம் தெரிவித்தார்.

இந்த ஆலயத்தின் ரத ஊர்வலத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் பர்மிட் வழங்க அனுமதிக்க வேண்டும் என பேரா மாநில ஜசெக துணைத் தலைவருமான சிவக்குமார் வலியுறுத்தினார்.

செந்துல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் மறுத்துவிட்டதாக நேற்று காலை சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை அறிந்து தாம் பெரும் ஏமாற்றம் அடைந்ததாக சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனால் இந்நாட்டில் உள்ள இந்து சமயத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆலயத்தின் ரத ஊர்வலத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் அனுமதி வழங்க அல்லது பெர்மிட் தருவதற்கு மறுத்துள்ளது.

1899ஆம் ஆண்டு முதல் சுமார் 120 ஆண்டு காலமாக பங்குனி உத்திர ரத ஊர்வலத்தை செந்துல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் நடத்தி வருகிறது .இந்த ஆண்டு கோலாலம்பூர் மாநகர்   மன்றத்தினர் பங்குனி உத்திர ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது கண்டிக்கக் கூடிய ஒரு செயலாகும் .குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது வேண்டுமென்றே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

லெபோ அம்மபாங் மற்றும் செந்துல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திற்கு இடையே மார்ச் 21ஆம் தேதி இந்த இரத ஊர்வலம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

மார்ச் 5ஆம் தேதி கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட கடிதத்தில் ரத ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதை தெரிய வந்தது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமாட் கடமையாக கருத வேண்டும் .மேலும் செந்துல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய பங்குனி உத்திர ரத ஊர்வலம் நடைபெறுவதற்காண அனுமதி அங்கீகாரம் கிடைப்பதற்கு அமைச்சர் பொருத்தமான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இல்லாவிட்டால் நம்பிக்கை கூட்டணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம். அதோடு விரைவில் நடைபெறவிருக்கும் ரெம்பாவ்  சட்டமன்ற இடைத்தேர்தலில் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சிவக்குமார் குறிப்பிட்டார்.