ஷா ஆலமில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி,நால்வர் காயம்

0
12

ஷா ஆலம், மார்ச் 10-

ஷா ஆலாமில்  இன்று மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் மாண்டதோடு மேலும் நால்வர் காயமடைந்தனர். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மின்னல் தாக்கி மாண்ட இளைஞரும் காயமடைந்தவர்களும் ரோஹிங்கியா இளைஞர்கள் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.