கோலாலம்பூர், மார்ச் 11-
தமிழ்ப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களின் கற்றல் குறைபாடு குறித்து தமிழாசிரியர்கள் அறிந்து கொள்வதற்கு சமூக வியூக அறவாரியம் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த கற்றல் குறைபாடு பயிற்சியில் பங்கு பெறும் ஆசிரியர்கள், சிந்தனை ஆற்றல் குறைவாக உள்ள மாணவர்களை எப்படி திறன் மிக்கவர்களாக உருவாக்க முடியும் என்று முழுமையாக அறிந்து கொள்கிறார்கள் என சமூக வியூக அறவாரியத்தின் வாரியக் குழு தலைவர் டான்ஸ்ரீ மாரிமுத்து தெரிவித்தார்.
மற்ற இன பள்ளிகளுக்கு இணையாக தமிழ் பள்ளிகளும் மேம்பாடு காண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தற்போது தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம் மாறுபட்டுள்ளது. புதிய கட்டடம், வசதி என அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டு வரும் நிலையில், மாணவர்கள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என டான்ஸ்ரீ மாரிமுத்து கூறினார்.
சமூக வியூக அறவாரியம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களில் 38 விழுக்காடு மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு பிரச்சினை இருக்கின்றது. பாடத்திட்டத்தை அல்லது அதில் இருக்கும் நுணுக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மாணவர்களுக்கு மிகக் குறைவாக இருக்கின்றது. இவர்கள் மற்ற மாணவர்களைப் போல எளிதாக ஒரு பாடத்தை உணர்ந்து கொள்ள மாட்டார்கள். இவர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து இந்தியா தனி பாடத்திட்டத்தையே கொண்டுள்ளது.

அதிலிருந்து இரண்டு அம்சங்களை முன்னெடுத்து தமிழ் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்களை எப்படி அணுகுவது என்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை மேலும் தொடர்வதற்கு ஆண்டிற்கு 12 லட்சம் வெள்ளி தேவைப்படுகின்றது. முன்னதாக செடிக் அமைப்பு வழங்கிய மானியத்தின் மூலம் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கின்றோம். தற்போது மித்ராவும் இதற்கு நிதி வழங்கினால்ர் இந்த நடவடிக்கையை தொடர முடியும் என டான்ஸ்ரீ மாரிமுத்து கூறினார்.
தேசிய நிலையில் 100 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கற்றல் குறைபாடு பயிற்சியில் முழுமையாக கலந்து கொண்டார்கள். இந்த பயிற்சி ஒராண்டு வழஙப்பட்டது. இதற்காக அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைநகரில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக வியூக அறவாரியத்தின் தலைமை நிர்வாகி கணேசன் தங்கவேலு இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கும் என அதன் குறிப்பிட்டார்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் நிச்சயமாக கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்களை சிறப்பான முறையில் கையாள்வார்கள் என்ற நம்பிக்கையை அவர் வழங்கினார். நம்பிக்கை தெரிவித்தார்.





