அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘கல்வி சாதனை’ தொடங்கியது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘கல்வி சாதனை’ தொடங்கியது!

கோலாலம்பூர் மார்ச் 11-

மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் தங்களின் கல்வி நிலையங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு கூடுதலாக ஏதேனும் பயிற்சிகளை வழங்க முடியுமா என்பது குறித்த நடவடிக்கைகளை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

இவ்வாண்டு கல்வி சாதனை என்ற திட்டத்தை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கி இருக்கின்றது. இதில் யூபிஎஸ்ஆர், தேர்வு எழுதவிருக்கும் தமிழ்ப்பள்ளி மற்றும் தேசிய பள்ளி மாணவர்களுக்காக மாதம்தோறும் தேர்வுகளை நடத்துவதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை சேர்ந்த ஸ்ரீ கணேஷ் கூறினார்.

இதன் முதல் தேர்வு மலாய் மொழியை சார்ந்ததாக அமைந்திருந்தது. குறிப்பாக 20 கேள்விகள் இதில் வழங்கப்பட்டிருந்தன. 10 கேள்விகள் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயிற்சிகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும், இதர 10 கேள்விகள் திறன் மேம்பாட்டு சார்ந்த கேள்விகளாக அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 120 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பரிசளிப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பாடத்திட்டம் குறித்த தேர்வுகளை நடத்தவிருப்பதாகவும் ஸ்ரீ கணேஷ் கூறினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜா, மாணவர்களை எப்படி உயர்நிலை சிந்தனை கொண்டவர்களாக உருமாற்ற முடியும் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். அவரின் வழிகாட்டலில் தான் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இம்மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை இப்போட்டி நடத்தப்படுகின்றது. இதில் பெற்றோரும் ஆவலாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார். அடுத்த மாதம் கணிதத் தேர்வு நடைபெற இருப்பதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன