ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > எஸ்பிஎம் தேர்வு: ஈப்போவில் இந்திய மாணவர்கள் சாதனை!
சமூகம்முதன்மைச் செய்திகள்

எஸ்பிஎம் தேர்வு: ஈப்போவில் இந்திய மாணவர்கள் சாதனை!

ஈப்போ, மார்ச் 14

இன்று வெளியான எஸ்பிஎம் தேர்வு முடிவில் ஈப்போ வட்டாரத்தில் உள்ள  பல பள்ளிகளில இந்திய மாணவர்கள் பலர் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

அதிக இந்திய மாணவிகள் கொண்ட இடைநிலைப் பள்ளியான ஸ்ரீ புத்திரி பள்ளியில் அதன் தேர்ச்சி விகிதமும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு 16 மாணவிகள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று முன்னணி வகிக்கின்றனர்.

அவர்களில் எஸ். ஜஸ்வின் 11 ஏ பெற்று முதல் நிலை மாணவியாக தேர்வுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது்

அதில்  எல்.சார்மிலா 10 ஏ, பெற்றவேளையில் எஸ்.சாரணி , கே.கணேஷ்வரி, தி. ஷார்மிலா ஆகிய ஆகிய மூவரும் முறையே 8ஏ பெற்று சாதனைப் படைத்தனர்.

பேரா மாநிலத்தில் சுமார் 95 விழுக்காடு இந்திய மாணவர்கள்  கொண்ட இடை நிலைப் பள்ளியாக விளங்கும் சுங்கை பாரி ஆண்கள் இடை நிலைப் பள்ளியிலும் இந்திய  மாணவர்கள்  சாதனையை படைத்துள்ளனர் .

அதில்  அறிவழகன் 11ஏ ,  பி.பிரவின் பல்டிப் 10 ஏ பெற்ற வேளையில் மேலும் பல மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இப்பள்ளியில் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் பள்ளியின் முதல்வர் சுப்பிரமணியம் மற்றும் சக  ஆசிரியர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சேகர் நாராயணன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இங்குள்ள சென் மைக்கல் இடை நிலைப் பள்ளியில் எஸ்.பி.எம் தேர்வில்  செந்தில் நாதன் ஜெயபாலன் 10 ஏ  பெற்றார் அதில் ஆறு பாடங்களில் 6ஏ பிளாஸ் பெற்றுள்ளார் .

இவர் பள்ளியில் இரண்டாவது  சிறந்த மாணவனாக தேர்வுப் பெற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன