புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பாசீர் கூடாங்கில் அவசர நிலையை பிரகடனப்படுத்த நாடாளுமன்றம் அங்கீகாரம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

பாசீர் கூடாங்கில் அவசர நிலையை பிரகடனப்படுத்த நாடாளுமன்றம் அங்கீகாரம்

கோலாலம்பூர், மார்ச் 14-

ஜோகூர், பாசீர் கூடாங், கிம் கிம் ஆற்றில் ரசாயன கழிவு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அவசர பிரேரணை ஒன்றை நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

18 (1) உத்தரவின் கீழ் ) பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் அப்துல் காரிம் கொண்டு வந்த பிரேரணையை மக்களவை சபாநாயகர் டத்தோ முகமது அரிஃப் முகமது யூசோப் ஏற்றுக் கொண்டார்.

“சபாநாயகர் என்ற முறையில் சிறப்பு விவகாரம், பொது மக்கள் நலன் மற்றும் அவசர தேவை ஆகிய தேவைகளை நிறைவேற்றியிருக்கும் இந்த பிரேரணையில் நான் மனநிறைவு கொள்கிறேன்”.

“இந்தப் பிரேரணை  குறித்து 60 நிமிடங்களுக்கு விவாதிக்க நான் அனுமதி அளிக்கிறேன்” என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன