புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் ஏற்பாட்டில் ‘தர்மத்தின் வழி 3.0’ குறும்படப் போட்டி
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் ஏற்பாட்டில் ‘தர்மத்தின் வழி 3.0’ குறும்படப் போட்டி

கோலாலம்பூர். மார்ச் 14-

இன்றைய இளையோர்களுக்கு மத்தியில் நிறைய திறமைகள் இருந்தாலும் அத்திறமையை வெளிகொணர்வதற்க்கு வாய்ப்புகள் குன்றியே இருக்கிறது. இவ்வேளையில் நம் நாட்டின் தலைச்சிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றான மலாயாப் பல்கலைக்கழகம் நம் இளைஞர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த பல போட்டிகளை சிறப்புர ஏற்பாடு செய்து வருகின்றது.

ஆக இவ்வாண்டும் மாணவர்களின் கலை உணர்வை கருத்தில் கொண்டு தர்மத்தின் வழி 3.0 எனும் குறும்படப் போட்டி இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு “தர்மத்தின் வழி” என்ற குறும்படப் போட்டியை தேசிய அளவில் அறிமுகப்படுத்தியது. அனைத்து அரசாங்க மற்றும் தனியார் உயர்க்கல்விக்கூட மாணவர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் நடத்தப்பட்ட இப்போட்டி இன்றைய இளைய தலைமுறையினர்கள் இந்து சமயத்தைப் பற்றியும் தமிழர்ப் பண்பாட்டைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள ஒரு தளமாக அமைந்தது.

இப்போட்டியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மலாயாப் பல்கலைகழக மாணவர்களின் முயற்சியில் மூன்றாம் தடவையாக இவ்வாண்டு தர்மத்தின் வழி 3.0 எனும் குறும்படப் போட்டி சர்வதேச நிலையில் அடி எடுத்து வைக்கின்றது. பல்வேறு நாடுகளில் இருந்தும் இப்போட்டிக்கு விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பல பரிணாமங்களில் தரமான குறும்படம் தயாரிப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதோடு கலைத்துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகக் காணப்படுகின்றது.

இவ்வருடம் தர்மத்தின் வழி 3.0 குறும்படப் போட்டி தனது புத்தம் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கின்றது. இவ்வருடம் அனைத்துலக நிலையில் திருக்குறளைக் கருவாக கொண்டு இப்போட்டி நடைபெறவிருக்கின்றது. உலகளாவிய நிலையில் உள்ள உயர்க்கல்விக்கூட மாணவர்களும் பொது மக்களும் இப்போட்டியில் பங்கெடுக்க அழைக்கப்படுகின்றனர்.

மேலும் இப்போட்டி தங்கு தடையின்றி நடைபெற ஆதரவாளர்களை நாடுகிறோம். மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் இம்மாதிரி பல முயற்சிகளுக்கு மக்கள் நல்ல ஒத்துழைப்பும் மற்றும் உதவிகளும் புரிவதன்பால் மாணவர்கள் தங்களிடம் இருக்கும் திறமைகளைப் இப்போட்டிகளின் மூலம் வெளிப்படுத்தி எதிர்காலத்தில் நம் இளைய சமுதாயத்தினரின் வாழ்வு மேன்மையடைய வழி வகுக்கும் என்பது திண்ணம். மேல் விவரங்களுக்கு : கணேஷ் 017-673 0696, சுபித்ரா 012-305 7687,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன