புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தினாஞ்சலி இசை ஆவண திரைப்படம் புதிய சாதனை படைக்கும்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தினாஞ்சலி இசை ஆவண திரைப்படம் புதிய சாதனை படைக்கும்!

கோலாலம்பூர், மார்ச் 14-

ஆவணத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக மனித வாழ்வியல் முறையை கலையோடும் இசையோடு இணைத்து பேசி புதிய படைப்பாக வெளியாகி இருக்கிறது “தினாஞ்சலி” – வாழ்வின் கானம் என்ற இசை ஆவணத் திரைப்படம்.

விஞ்ஞானம் மெய்ஞானமும் சேரும்போது, மனிதன் கடந்து போகும் பாதைகளில், அவர்கள் தாங்கள் யார் என்பதை முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் அனுபவத்தையும் ஏற்படுத்தி தரும் வகையில் இந்த திரைப்படம் ஆழமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை ஆவணத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி, சிலாங்க்கூர் டாமான்சாரா இகேவ் பேரங்காடி மையத்தின் திரையரங்கில் சிறப்பு முன்னோட்ட காட்சியாக ஒளிஏற்றம் கண்டது. செய்தியாளர்கள், படத் தயாரிப்பு குழுவினர் மற்றும், முக்கிய பிரமுகர்கள் இந்த முன்னோட்ட காட்சியில் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

தமது படம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவுடன், அவர்களை புரிந்து கொள்ளவும் கற்றல் பயணமாகவும் அமைந்து, அவர்களின் உள்ளிருக்கும் திறனைக் கண்டுபிடித்து, இன்றைய சமுதாயத்தில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களில் இருந்து சுதந்திரத்திற்கான வழிகளை அடைய உதவி செய்யும் என்று தினாஞ்சலி படத் தயாரிப்பாளர், இயக்குனர் & எழுத்தாளருமான சுஷீல் கமோத்ரா கூறினார்.

UNIVERSAL FACE THEORY என்ற நூலை எழுதி மிகவும் பிரபலமான இந்தியாவைச் சேர்ந்த சுஷீல் கமோத்ரா பொறியியல் மற்றும் கட்டுமான மேலாண்மை துறையில் 30 ஆண்டுகால அனுபவங்களை கொண்டிருப்பவர் ஆவார். இரண்டும் கலை என்பதால், இரண்டிலுமே இவர் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

சமூக சிந்தனையை பேசும் இந்த திரைப்படம், ஒரு தம்பதியரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமது புத்தகத்தின் செய்திகளை, இதுபோல திரைப்படமாக கொடுக்கும்போது, அது மக்களிடத்தில் எளிய முறையில் அவர்களைச் சென்று அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தரமான படைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மலேசியா, இந்தியா, அமெரிக்கா போன்ற பல்வேறு பிரதான இடங்களில் இதன் காட்கள் படமாக்கப்பட்டுள்ளதாக சுஷில் கமோத்ரா கூறினார்.

அண்மையில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விருது விழாவில் “சிறந்த இசை” க்கான விருதையும் தினாஞ்சலி வென்றிருப்பதுடம், இன்னும் மூன்று விருது விழாக்களில் பங்கு பெற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒலி மற்றும் நவீன வடிவமைப்புகள் அனைத்தும் சென்னையில் இருக்கும் ஏ.ஆர் ரஹமான் ஸ்டுடியாவில் மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வாழ்க்கை பயணத்தில் வேறுபட்டிருக்கும் மனித இனத்தை ஒன்று படவைக்கும், ஆழமான சமூக சிந்தனை முன்னிருத்தி, மனிதன் எவ்வாறு தன்னை உணர்ந்து முழுமையாக செயல்பட முடியும் என்பதை இந்த ஆவணத் திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது. எனவே, ஏப்ரல் மாதம் 18 தேதி வெளியாகும் இந்த ஆவணத் திரைப்படத்தை மலேசியர்கள் கண்டு களித்து பயன்பெற வேண்டும் என்று தயாரிப்பு குழுவினர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன