புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலேசியா தலிபான் நாடாகிவிடாது -பாஸ் கட்சி கூறுகிறது
அரசியல்முதன்மைச் செய்திகள்

மலேசியா தலிபான் நாடாகிவிடாது -பாஸ் கட்சி கூறுகிறது

கோலாலம்பூர், மார்ச் 14-

அம்னோ மற்றும் பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பின்  மூலமாக எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் வெற்றி பெற்றால் மலேசியா தலிபான் நாடாகிவிடாது என ஐசெகவுக்கு  பாஸ் கட்சி கூறியிருக்கிறது.

மலேசியா தலிபான் நாடாகிவிடும் என ஜசெக கவலைப்பட வேண்டியதில்லை என பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

அம்னோ மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நாட்டில் இன ரீதியான நெருக்கடியை கொண்டுவராது என  அவர் தெரிவித்தார்.

இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நாட்டில் இன நெருக்கடியை ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அமைதியும் சுபிட்சமும் ஒற்றுமை தொடர்ந்து நீடிப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர்  கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன