புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > எஸ்பிஎம் தேர்வு: சுங்கை சிப்புட்டில் கவிஷேன் நாயர் 12ஏ பெற்றார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

எஸ்பிஎம் தேர்வு: சுங்கை சிப்புட்டில் கவிஷேன் நாயர் 12ஏ பெற்றார்

சுங்கை சிப்புட், மார்ச் 14-

எஸ்பிஎம் தேர்வில் இந்த முறை இங்குள்ள டத்தோ ஹாஜி வஹாப் இடைநிலைப்பள்ளியில் இந்திய மாணவர்கள் சிறந்த பதிவை செய்துள்ளனர் .

இதில் ஜி்.கவினேஷ் நாயர் 12 ஏ பெற்று வரலாற்றை பதிவு செய்துள்ளார். பவித்ரா சத்தியசீலன் 10ஏ, தீபன்ராவ் 7ஏ , 2 பி பெற்றுள்ளானர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது  மற்ற மாணவர்களும் சிறந்த முறையில் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.

இப்பள்ளியில் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த மாணவர்களின் வளர்ச்சிக்கு சேவையாற்றி வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தொகுதி காங்கிரஸ் செயலாளர் கி.மணிமாறன் பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே ஈப்போவில் உள்ள தார்சிசியன் பெண்கள் இடைநிலைப்பள்ளியில் இந்த தேர்வை எழதிய எஸ்.அபிராமி 10 ஏ பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இம்மாணவி மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவியாவார். இவருக்கு மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரியம்மாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன