வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தூய்மைக்கேடு பிரச்சனைக்கு விரைவான தீர்வு காண்பீர்; வித்யானந்தன்  கோரிக்கை
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தூய்மைக்கேடு பிரச்சனைக்கு விரைவான தீர்வு காண்பீர்; வித்யானந்தன்  கோரிக்கை

ஜோகூர்பாரு. மார்ச் 14-

ஜோகூர், பாசீர் கூடாங் ஆற்றில் ஏற்பட்ட ரசாயன நச்சு கழிவு தூய்மைக் கேடு பிரச்சனைக்கு விரைவான தீர்வை காண்பதற்கு  ஜோகூர் மாநில அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில மஇகா  தலைவர் இரா.நித்றயானந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தை கையாள்வதில் அரசாங்கம் தாமதமான நடவடிக்கை மேற்கொண்டது குறித்தும் அவர் ஏமாற்றமும் கவலையும் தெரிவித்தார்.  இந்த ரசாயன நெருக்கடி குறித்து விசாரணை நடத்துவதற்கு சுயேச்சை விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும்படியும் வித்தியானந்தன் கேட்டுக்கொண்டார்.

கிம் கிம் ஆற்றில் ஏற்பட்ட நச்சு ரசாயன தூய்மை கேட்டினால் இதுவரை 900த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக   ஜொகூர் மக்களுக்கு மாநில அரசாங்கம் தெளிவான மற்றும் விரிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வித்யானந்தன் வலியுறுத்தினார்.

சுற்றுப்புற தூய்மைக் கேட்டினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு விரைவான உதவியையும் பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த சேவையை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக அரச சார்பற்ற இயக்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச்  சேர்ந்தவர்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன