புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > எஸ். பி. எம் தேர்வில் ருத்ரன் ராஜேந்திரன் 9ஏ பெற்றார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

எஸ். பி. எம் தேர்வில் ருத்ரன் ராஜேந்திரன் 9ஏ பெற்றார்

சிரம்பான், மார்ச் 14-

நெகிரி செம்பிலான், சிரம்பான், புக்கிட் மேவா இடைநிலைப் பள்ளி மாணவர் ருத்ரன் ராஜேந்திரன் எஸ். பி. எம். தேர்வில் 9 ஏ பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தார்.

இப்பள்ளியைச் சேர்ந்த  29 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ பெற்றனர். இவர்களில் ஒன்பது பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு இப்பள்ளி எஸ்பிஎம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்ததாக பள்ளி முதல்வர் டான் சீ கியோங் கூறினார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, பெற்றோர்களின் ஊக்குவிப்பு மற்றும் மாணவர்களின் கடின உழைப்பு ஆகியவையே இவர்களின் வெற்றிக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது என்றார் அவர்.

அவ்வகையில் இத்தேர்வில் தான் சிறந்த விளங்குவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணை புரிந்த  ஆசிரியர்கள், நல்வழிகாட்டியாக இருந்த அன்புப் பெற்றோர் திரு திருமதி ராஜேந்திரன் அனிதா ஆகியோருக்கு ருத்ரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன