புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மென்செஸ்டர் யுனைடெட்டின் மோசமான ஆட்டம் – சோல்ஜ்ஸ்கர் அதிருப்தி !
விளையாட்டு

மென்செஸ்டர் யுனைடெட்டின் மோசமான ஆட்டம் – சோல்ஜ்ஸ்கர் அதிருப்தி !

வோல்வர்ஹாம்ப்டன், மார்ச்.17-

இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1 – 2  என்ற கோல்களில் வோல்வர்ஹாம்ப்டனிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நார்வேயின் ஓலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் நிர்வாகி  பொறுப்பை ஏற்றப் பின்னர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் தோல்வியே காணாத மென்செஸ்டர் யுனைடெட் கடந்த வாரம் அர்செனலிடம் தோல்வி கண்டது.

இந்நிலையில் எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.இந்த ஆட்டத்தில் தமது ஆட்டக்காரர்கள் மோசமான ஆட்டத்தரத்தை வெளிப்படுத்தி இருப்பதாக சோல்ஜ்ஸ்கர் தெரிவித்தார்.

ஆட்டம் தொடங்கியது முதலே,  வோல்வர்ஹாம்ப்டன் ஆட்டக்காரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கமால், மெத்தனப் போக்கில் இருந்ததால், மென் யுனைடெட் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக சோல்ஜ்ஸ்கர் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் வோல்வர்ஹாம்ப்டன் தனது இரண்டு கோல்களையும் போட்டது.

மென்செஸ்டர் யுனைடெட்டின் ஒரே கோலை ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் மார்கோஸ் ராஷ்போர்ட் போட்டார். இந்த பருவத்தில், மென்செஸ்டர் யுனைடெட்,  எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மட்டுமே கிண்ணத்தை வெல்லக்  கூடிய வாய்ப்பைக் கொண்டிருந்தது. தற்போது வோல்வர்ஹாம்ப்டனுக்கு எதிரான தோல்வி மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுப் பொடியாக்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன