அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பேரா ஸ்ரீ முருகன் நிலையம்: எஸ்பிஎம் தேர்வில் கவியரசி மனோகரன் சிறந்த மாணவியாக தேர்வு!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பேரா ஸ்ரீ முருகன் நிலையம்: எஸ்பிஎம் தேர்வில் கவியரசி மனோகரன் சிறந்த மாணவியாக தேர்வு!

ஈப்போ மார்ச் 17-

கடந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களில் பேரா பீடோரைச் சேர்ந்த எம்.கவியரசி மனோகரன் சிறந்த மாணவியாக தேர்வு  பெற்றார்.

நாட்டில் இயங்கி வரும் ஸ்ரீ முருகன் நிலையத்தில் மேற்கொண்டு வரும் கல்வி வகுப்பில் தேசிய நிலையில் சிறந்த மாணவருக்குறிய சிறப்பை இம்மாணவி பெற்றுள்ளார் என்று மாநில ஸ்ரீ முருகன் நிலைய  ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.

இம்மாணவி 11ஏ பெற்றுள்ளார் அதில் 9 ஏ பிளாஸ் மற்றும் 2 ஏ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வை எழுதிய மேலும் பல மாணவர்கள் சிறந்த மதிப் பெண்களை பெற்றுள்ள தகவலை அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் இங்கு இந்த தேர்வை எழுதிய எம். வர்னேஷ்வரன் 8ஏ, 1 பி, மற்றும் அருணா நாயர் 7ஏ, 1பி பெற்றுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு ஆண்டு இந்திய மணவர்களின்  தேர்ச்சி விகிதம்  தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன