புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தேசிய நில நிதிக் கூட்டறவுக் சங்கம்: 8 விழுக்காடு லாப ஈவு அறிவிப்பு 
சமூகம்முதன்மைச் செய்திகள்

தேசிய நில நிதிக் கூட்டறவுக் சங்கம்: 8 விழுக்காடு லாப ஈவு அறிவிப்பு 

ஈப்போ மார்ச் 17-

தேசிய நில நிதிப் கூட்டுறவுச் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈவு வழங்கப்படும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் கூறினார்

அந்த கூட்டறவுக் சங்கம்,  செம்பனை விலையில் சரிவுக் கண்டாலும் அதன் உறுப்பினர்களுகளுக்கு நிதியை வழங்க வலுபெற்றுள்ளது.

இந்த ஆண்டு  ஜூன் மாதம் தலைநகரில் நடைபெறவிருக்கும் அதன் தேசிய பேராளர்கள் மாநாட்டில் அங்கிகரித்தப் பின்னர்  அந்த தொகை வழங்கப்படும் என்ற தகவலைத் தெரிவித்தார் .

கடந்த ஆண்டு செம்பனை விளைச்சலில் நான்கு தோட்டங்களில் இழப்பை எதிர்நோக்கியுள்ளது இதற்கு தொழிலாளர்கள் பற்றாக் குறையும் ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 27 ஆண்டுகள் 8 விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டு வருகிறது். கூட்டறவுச் சங்கம் இதர முதலீட்டின் வழி லாபத்தை பெற்று வருவதால் உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க முடிவதாக குறிப்பிட்டார்

பேராவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோன் பி தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதியோர் இல்லம் விரைவில் நிர்மாணிக்கப்படும்.

அதன் கட்டட வரைப்பட அங்கிகாரத்திற்காக  காத்துள்ளதாக விளக்கம் அளித்தார். மேலும் சங்க உறுப்பினர்களுக்கு பல சேவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார் .

இராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ற கூட்டறவுச் சங்கத்தின் பேரா மாநில பேராளர்கள் தேர்தலை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன