இவ்வாண்டின் மிகச்சிறந்த இசைத் திருவிழா! ரெட்ரோ ரஹ்மான் 2.0

கோலாலம்பூர், ஆக்ஸ்ட் 2-

தரமான இசை நிகழ்ச்சிகளை படைப்பதன் வாயிலாக மலேசியாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியிருக்கும் மோஜோ புரொஜெக் ஏற்பாட்டில் ரெட்ரோ ரஹ்மான் 2.0 சனிக்கிழமை இரவு மிக விமர்சையாக நடைபெற இருக்கின்றது.

கடந்த ஆண்டு நடந்த ரெட்ரோ ரஹ்மான் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், ஹரிணி, அனில் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களோடு மலேசியா கலைஞரான ராகா வானொலி புகழ் ஆனந்தாவும் கலந்துகொண்டு மிகச்சிறந்த நிகழ்ச்சியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. அதன் காரணமாக இவ்வாண்டு ரெட்ரோ ரஹ்மான் 2.0 ஏற்பாடு செய்ததாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரத்னகுமார் தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு இன்னும் மிகச்சிறந்த படைப்பினை வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழகத்தின் ராக் ஸ்டார் என அழைக்கப்படும் மனோ, ஏ ஆர் ரஹ்மான் இசையில் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஸ்ரீனிவாஸ், ஹரிணி, சாதனா சர்கம் ஆகியவர்களுடன் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த பாடகரான சத்திய பிரகாஷ் களமிறங்குகிறார். அதோடு கடந்த ஆண்டு ரெட்ரோ ரஹ்மான் நிகழ்ச்சியில் தமது இசை திறமையின் மூலம் அனைவரையும் கவர்ந்த அனில் சீனிவாசன் இம்முறையும் கலந்து கொள்கிறார்.

வியாழக்கிழமை நடந்த இந்நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில் இந்த அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்பார்ப்பை முன்வைத்தனர். ரசிகர்களின் எண்ணத்தை குறிப்பாக அவர்கள் விரும்பும் பாடல் எதுவாக இருந்தாலும் அதனை மேடையில் படைப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஸ்ரீனிவாஸ் கூறினார். இந்த ஐந்து கலைஞர்களும் ரசிகர்கள் முன்னிலையில் தங்கள் பாடிய புகழ் பெற்ற பாடல் ஒன்றை பாடி பாராட்டையும் பெற்றவர்.

இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ விமானமாக மலிண்டோ விளங்குகின்றது. தரமான சேவையும் அன்பான அணூகுமுறையும்தான், அனைத்து ஏற்பாட்டாளர்களும் தங்களை நாடி வருவதாக மலிண்டோ சுரேஷ் கூறினார். இதுவரையில் மோஜோ ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே ஏற்பாடு செய்யும் மோஜோ இந்த முறையும் மிகச் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருக்காது. இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 7.30மணிக்கு தலைநகர் ஸ்டார் எஸ்போஅரங்கில் நடைபெறுகிறது.