வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > திருவிளக்கு பூஜையில் 108 பக்தர்கள் கலந்துக்கொண்டனர்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

திருவிளக்கு பூஜையில் 108 பக்தர்கள் கலந்துக்கொண்டனர்!

கோலாலம்பூர் ஆகஸ்ட்  10-

வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஏற்ப்பாடு செய்திருந்த திருவிளக்கு பூஜையில் 108 பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.சுமார் மாலை 7.00 மணியளவில் துவங்கிய இந்த சிறப்பு வழிபாட்டில் வயது பேதமின்றி பெண்கள் கலந்துக்கொண்டனர்.

தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புப்படி சரியாக 108 பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துக்கொண்டது சிறப்பம்சமாகும். பூஜையில் கலந்துக்கொண்ட பக்தர்கள் மாலை 6.00 மணியிலிருந்து ஆயத்தமாக தொடங்கினர்.

இந்த திருவிளக்கு பூஜையை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் தலைமை குருக்கள் சிவ ஸ்ரீ சிவக்குமார் பட்டர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். அவருக்குத் துணையாக மற்ற குருக்கள் செயல்பட்டனர்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை வரும் இந்த வரலக்ஷ்மி விரத திருவிளக்கு பூஜை, மாங்கல்ய பாக்யம், நீண்ட ஆயுள், லக்ஷ்மி கடாட்ச்சம் மற்றும் பல நன்மைகளை வேண்டி குறிப்பாக பெண்கள் செய்யும் சிறப்பு வழிபாடாகும். ஒவ்வொரு வருடமும் தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த திருவிளக்கு பூஜை பக்தர்கள் எவ்வித குறையுமின்றி தங்களுடைய வழிபாட்டை சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக அமைகிறது.

அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் நமக்கு அருள்பாலிக்கும் அன்னை பராசக்தியை திருவிளக்கில் உருவேற்றி, பெண்கள் பிரத்தியேகமாக வழிபாடு செய்து அன்னையின் அருளாசியை பெரும் இந்த திருவிளக்கு பூஜை, ஆடி மாதத்தில் வரும் ஒரு முக்கியமான வழிபாடாகும்.

இந்த வழிபாட்டின் வழி பக்தர்கள் மென்மேலும் பயனடையும் வகையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் திருவிளக்கு பூஜையைத் தொடர்ந்து நடத்தி வரும் என்று தேவஸ்தானத்தின் பொதுத் தொடர்பு வியூக இயக்குனர் திரு. சிவக்குமார்
கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன