சார்லஸ் சந்தியாகோ ஒரு பொய்யர்! – மஸ்லி மாலிக்

கோலாலம்பூர் ஆகஸ்ட் 13-

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அரசு சார்ந்த முடிவுகளை சுயமாக எடுக்கிறார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கூறிய கருத்தை கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் மறுத்தார்.

அமைச்சரவை கூட்டத்தில் நாட்டில் நிலவும் பல்வேறு சம்பவங்கள் குறித்தும் நடவடிக்கைகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு உள்ளதையும் மஸ்லி சுட்டிக்காட்டினார்.

முடிவை எடுப்பதற்கு முன்னதாக அமைச்சரவையில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் துன் டாக்டர் மகாதீர் விவாதித்திருப்பதால் சார்லஸ் சந்தியாகோ கூறிய கருத்து பொய்யான கருத்து. அவர் ஒரு பொய்யர் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் அரபு சித்திர மொழியை அறிமுகப்படுத்துவது குறித்து கருத்துரைத்த சார்லஸ் சந்தியாகோ முக்கிய முடிவுகளை பிரதமர் சுயமாக எடுக்கிறார் என குறிப்பிட்டார். அதோடு மதபோதகர் ஜாகிர் நாயக் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் என்னோடு ஒப்பிடக்கூடியவரா? சார்லஸ் சந்தியாகோ என நேற்று கூறியிருந்தார்.
பிரதமர் டாக்டர் மகாதீர் அனைவரது கருத்துக்கும் மதிப்பளிக்க கூடியவர். மக்களுக்கு எது சரியோ அதை தான் இந்த நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் முன்னெடுக்கிறது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.