முகப்பு > சமூகம் > கற்றல் கற்பித்தல் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் ஆசிரியர் சுரேன் ராவ்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கற்றல் கற்பித்தல் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் ஆசிரியர் சுரேன் ராவ்

சுங்கை சிப்புட், ஆக 13-

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி ஆசிரியரான சுரேன் ராவ் கற்றல் கற்பித்தல் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை மாணவர்களுக்கு தமிழ்மொழி பாடத்தை கற்பிப்பதன் மூலம் இந்த சாதனையை புரியவிருக்கிறார். முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை சுமார் 300 மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

3 ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழ்மொழி மற்றும் உடற்கல்வி பாடங்களை கற்பித்து வரும் சுரேன் ராவ் மாணவர்களை பல போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில் ஆர்வம் கொண்டவர். ஓட்டப்பந்தையம், வளர்தமிழ் விழா, பாடல் போட்டி உட்பட பல போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்து சென்று வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமைத் தேடித் தந்துள்ளார். அதோடு அனைத்துலக கற்றல் கண்டுப்பிடிப்பு போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இதனிடையே, கற்றல் கற்பித்தலில் சாதனை புரிவதற்கு பெற்றோர், சக ஆசிரியர்கள், நண்பர்கள் என பலர் தனக்கு ஆதரவாக இருந்து வருவதாகவும் சுரேன் ராவ் அநேகனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அனைத்துலக கற்றல் கண்டுப்பிடிப்பு போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றபோது

12 மணிநேரம் இடைவிடாத கற்றல் கற்பித்தலுக்கு பின்னர் இரவு 8.30 நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், கல்வி துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹஜி அஸ்முனி பின் அவி உட்பட மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொள்வர்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சாதனை புரிவது அப்பள்ளிக்கு மட்டுமல்லாது நம் சமுதாயத்திற்கும் பெரும் சேரும். அவர் மேலும் பல சாதனை படைக்க அநேகன் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன