சிரம்பான், ஆக 13-

சிரம்பான் பந்தாய் ஹில்ஸிற்கு அருகில் வந்தாய்  ஓடை பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் காணாமல்போன அயர்லாந்து பெண் நோரா அனி கொய்ரின் என அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியதாக சிரம்பான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் மாட் யுசோப் தெரிவித்தார்.

நோரா அனி தங்கியிருந்த தங்கும் விடுதியிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஓடையில்  நிர்வாண நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார். ஆழமான கால்வாய் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அந்த சடலம் மீட்கப்பட்டு சவ பரிசோதனைக்காக துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த சடலம் நோராதான் என்று அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உறுதிப்படுத்தியதாக டத்தோ முகமட் மாட் யுசோப் தெரிவித்தார்.