வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேறு!!! – பேரின்பம் போர்க்கொடி
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேறு!!! – பேரின்பம் போர்க்கொடி

கோலாலம்பூர் ஆகஸ்ட் 14-

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென பேரின்பத்தின் ஆலோசகர் யு. தாமோதரன் வலியுறுத்தினார். இது குறித்த போலீஸ் புகாரையும் செந்தூல் காவல் நிலையத்தில் அவர் மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மலேசிய இந்துக்கள் குறித்து கருத்துரைப்பதற்கு ஜாகிர் நாயக்கிற்கு எந்த தகுதியும் இல்லை. மலேசிய பிரதமர் துன் மகாதீரை காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது மலேசிய இந்துக்கள் அதிக விசுவாசம் கொண்டு உள்ளார்கள் என ஜாகிர் நாயக் கூறிய கருத்து பூதாகரமாக வெடித்தது.

மலேசிய இந்துக்கள் துன் டாக்டர் மகாதீர் மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையான இந்திய வாக்குகளை எப்படி பெற்றது என்ற கேள்வியையும் தாமோதரன் முன்வைத்தார்.

இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம். அனைத்து இனங்களையும் அரவணைப்போம் என்ற கோட்பாடு 14 ஆவது பொதுத் தேர்தலில் களமிறங்கிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தற்போது தமது பாதையிலிருந்து விலகி இருக்கின்றது.

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்த அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 15ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு எதிராக பேரின்பம் இயக்கம் நாடு தழுவிய நிலையில் செயல்படும் என அவர் திட்டவட்டமாக கூறினார். அதோடு எங்களது எதிர்ப்பை காட்ட 50 ஆயிரம் பேரையும் திரட்டுவோம் என அவர் சூளுரைத்தார்.

”ஜாகிர் நாயக் உனக்கு என்ன தகுதி இருக்கிறது மலேசிய இந்துக்கள் குறித்து பேசுவதற்கு….”. ”உன்னை இந்த நாட்டிற்குள் அனுமதித்தது தான் மிகப்பெரிய தவறு.” ”ஜாகிர் நாயக் தவறான கருத்தை முன்வைத்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் எனக் கூறினீர்கள்.” ”இப்போது ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்.” என தாமோதரன் கேள்வி எழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன