புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அரபு ஓவிய எழுத்து;மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பீர்;அரசு சாரா இயக்கங்கள் பிரதமர் துறையில் மகஜர்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அரபு ஓவிய எழுத்து;மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பீர்;அரசு சாரா இயக்கங்கள் பிரதமர் துறையில் மகஜர்

புத்ராஜெயா, ஆக 15-

தமிழ், சீனப்பள்ளிகளில் அமல்படுத்தப்படவிருக்கும் அரபு ஓவிய எழுத்து விவகாரம் இன்னமும் மக்களிடையே குழுப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அரபு ஓவிய எழுத்து தேவையற்றது என்றாலும் சில மாற்றங்களுடன் அதனை மீண்டும் ஒரு தேர்வு பாடமாக கொண்டு வந்தது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அரபு ஓவிய எழுத்து தமிழ், சீனப்பள்ளிகளுக்கு தேவையற்றது என்று அரசு சாரா இயக்கங்கள் உட்பட பலர் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் பாதுகாப்பு இயக்கம், உதய சூரிய இயக்கத்தின் உறுப்பினர்கள் அரசு இந்த விவகாரம் தொடர்பில் மறுஆய்வு செய்ய வேண்டும் என கோரி நேற்று பிரதமர் துறையில் மகஜரை ஒப்படைத்தனர்.

இது குறித்து, தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மதியழகன் கூறுகையில், இந்த அரபு ஓவிய எழுத்து அறிமுகத்தால் தமிழ், சீனப்பள்ளிகள் எவ்வாறு பயனைவார்கள்? இத்தகைய திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. கலை கலாச்சாரத்திற்கு சார்ந்திடாத திட்டமாக உள்ளது என்று அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம், மலேசியா வாழும் மூவினத்திற்கும் சரிசமமான சலுகைகளை வழங்குவது மட்டுமின்றி மூவின ஒற்றுமையும் காக்கப்பட வேண்டும். மலேசியர்களாய் நாங்கள் ருக்குன் நெகாரா தேசிய கோட்பாட்டை கடைப்பிடிக்கிறோம். ஆகையால், பிரதமரும் தங்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த மகஜர் வழங்கும் நிகழ்வில், உதயசூரியன் இயக்கத்தின் தலைவர் பழனி, கூட்டரசு பிரதேச மஇகா தலைவர் ராஜா, மத்திய செயலவை உறுப்பினர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன