அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இந்து ஆலயங்களுக்கு நிதியுதவியும் கூடாரமும் வழங்கினார் சாங் லி காங் 
சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்து ஆலயங்களுக்கு நிதியுதவியும் கூடாரமும் வழங்கினார் சாங் லி காங் 

தஞ்சோங் மாலிம், ஆக 18-

தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் இரு இந்து ஆலயங்களின் ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லி காங் அவ்வாலயங்களுக்கு நிதியவியும் பொருளுதவியும் வழங்கினார்.

தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் கத்தோயோங் தோட்ட மகா கருமாரியம்மன் கோயிலின் ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொண்ட சாங் லி காங், அக்கோயிலுக்கு தரமான கூடாரத்தை வழங்கவிருப்பதாக அவர் உறுதியளித்தார். இந்து பக்தர்கள் ஆலயத்தில் எவ்வித சிக்கலும் இன்றி வசதியாக இறைவனைத் தொழ இந்த உதவியை அவர் வழங்கினார்.

தொடர்ந்து சிலிம் வில்லேஜ்ஜில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயிலின் ஆண்டுத் திருவிழாவிலும் மாண்புமிகு சாங் லி காங் கலந்து கொண்டார். அவ்வாலயட்த்தின் வளர்ச்சி நிதியாக வெ.3,000யை வழங்கி உதவினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன