செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இலவசக் கூடுதல் வகுப்புக்கு சாங் லி காங் உதவி
சமூகம்முதன்மைச் செய்திகள்

இலவசக் கூடுதல் வகுப்புக்கு சாங் லி காங் உதவி

தஞ்சோங் மாலிம், ஆக 18-

இங்குள்ள தஞ்சோங் மாலிம் பஹாய் ஆன்மீக இயக்கத்தார் நடத்தும் மாணவர்களுக்கானக் கூடுதல் வகுப்புக்குத் தேவைப்படும் நாற்காலி மேசைகளை தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினரான சாங் லி காங் இலவசமாக வழங்கியுள்ளார்.

முன்னாள் தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின் உறுப்பினர் மாதவனின் வீட்டில் நடத்தப்படும் இலவசக் கூடுதல் வகுப்பு நிரைவாகவும் மாணர்கள் அசௌகரியப்படாமல் இருப்பதற்காகவும் இந்த உதவியைச் செய்ததாக சாங் லி காங்கின் சிறப்பு அதிகாரி நவனீத் தெரிவித்தார்.

சுமார் 1000 ரிங்கிட்டுக்கும் மேலான மதிப்பைக் கொண்ட அந்தப் பொருட்களை வழங்கும்போது மக்கள் நீதிக் கட்சியின் சிலிம் ரிவர் கிளைத் தலைவர் லிம் சின் சியுவும் சிலிம் வில்லேஜ் புதுக்கிராமத் தலைவர் வோங் ஷியூ ஷியூயேவும் உடன் வந்திருந்தர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன