கோலாலம்பூர், டிச.7-

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில், மத்திய அரசாங்கத்தின் முடிவிற்கு பினாங்கு அரசாங்கம் கட்டுப்படுவதாக, அம்மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரான ஜைரில் கீர் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணத்தை முறைப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசாங்கமே கொண்டுள்ளது. அதனால், அவர்களின் அம்முடிவிற்கு கட்டுப்படுகின்றோம். நீண்ட கால அடிப்படையில், நீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக, அதற்கான செலவுகளைக் கருத்தில் கொண்டு அதன் கட்டண வழிமுறையை மத்திய அரசாங்கம் வகுத்துள்ளது.

பினாங்கு நீர் விநியோக வாரியம், ஒவ்வொரு மாதமும் நீர் விநியோகத்திற்காக அதிகப்படியான நிதியைச் சுமக்க வேண்டியுள்ளது. அதன் காரணமாக, பேராக் மாநிலத்திலிருந்து பினாங்கிற்கு நீரை பெறுவது, நீர் குழாய்களைச் சரி செய்வது முதலான இதர திட்டங்கள் தடைப்படுவதாகவும் ஜைரில் கீர் ஜொஹாரி கூறியுள்ளார்.