ஆயெர் கெரோ, டிச.7-

மலாய் வரலாற்றில் உள்ள சி கித்தோல் எனப்படும் கதாப்பாத்திரம் குறித்து தாம், கொள்கை உரையில் கூறியதற்கும், துணைத்தலைவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பி.கே.ஆரின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சி கித்தோல் கதாப்பாத்திரம் ஒரு வரலாற்று பதிவு. தன்னைக் கூறியதாக அஸ்மின் அலி கருதினால், அது அவருடைய பிரச்சனை என, இங்கு நடைபெற்றுவரும் பி.கே.ஆரின் மாநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார் கூறினார்.

சி கித்தோல் எனும் கதாப்பாத்திரம் நம்பிக்கை துரோகியாக சித்தரிக்கப்படுகின்றது. அந்த கதாப்பாத்திரம் காரணமாகத்தான் மலாக்கா அரசாங்கம் போர்த்துகிஸிடம் வீழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அந்த கதாப்பாத்திரம் குறித்து அன்வார் பேசியதால்தான், பல பேச்சாளர்கள் தன்னை தாக்கி பேசியதாகவும் அதன் காரணமாக, தாமும் தனது ஆதரவாளர்களும் அம்மாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறியதாகவும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.