மணிலா, டிசம்பர் 7-

சீ விளையாட்டிப் போட்டியின் கராத்தேவில் மலேசியாவைச் சேர்ந்த பிரேம் குமார் செல்வம் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமைத் தேடி தந்துள்ளார்.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த நோர்மான் மொன்தால்வோவுடன் பிரேம் குமார் போட்டியிட்டதில் 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப் பெற்றார்

கடந்த 2017ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற சீ போட்டியின் கராத்தேவில் பிரேம் குமார் வெண்கலம் பரிசை பெற்றார்.

தனது வெற்றிக்கு காரணமாக இருந்த பயிற்சியாளர் மகேந்திரனுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.