கோலாலம்பூர், ஆக.30 –

2017 சீ விளையாட்டுப் போட்டியின் பனி சறுக்குப் போட்டியில் மலேசியா கடைசி நாளான புதன்கிழமை மேலும் 4 தங்கப் பதக்கங்களை வென்றது. இம்முறை நடைபெறும் சீ போட்டியில் மலேசிய பனிசறுக்கு குழு 3 தங்கப் பதக்கங்களுக்கு மட்டுமே இலக்கு நிர்ணயித்திருந்தது.

எனினும் கடந்த சனிக்கிழமை ஜூலியன் யீ ஒரு தங்கப் பதக்கம் வென்ற வேளையில்இதில் அஞ்சா சோங் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் புரிந்துள்ளார்.

மகளிர்க்கான தனிநபர் 500 மீட்டர், 1000 மீட்டர். 3000 மீட்டர் அஞ்சல் பிரிவுகளில் அஞ்சா சோங் தங்கம் வென்றார். 3000 மீட்டர் அஞ்சல் பிரிவில் அஞ்சா சோங்குடன் ஆஷ்லி சின், நோர் மரிசா அலியா லொக்மான்,. சீ வான் நியும் இடம்பெற்றிருந்தனர்.

மலேசியாவின் ஐந்தாவது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான 3000 மீட்டர் அஞ்சல் பிரிவில் முஹமட் அரீப் ரஷ்டான், டே வின் வோங், கைரீல் ரிட்வான் , ஹசிம் ஷாரும் பெற்றுத் தந்தனர்.