கோலாலம்பூர், ஆக. 30 –

2017 சீ விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 85 கிலோகிராம் எடைத்தூக்குதல் போட்டியில் மலேசியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

புதன்கிழமை மலேசிய அனைத்துலக வாணிபம் மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற போட்டியில் மலேசியாவின் முஹமட் பஸ்ரூல் அஸ்ரி முஹமட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சீ போட்டியின் எடைத் தூக்குதலில் மலேசியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கமாகும். இதற்கு முன்னர் 77 கிலோ கிராம் பிரிவில் லோரோ வெல்கின்சன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்தப் போட்டியில் தாய்லாந்தின் போர்ன்சாய் லொப்சி தங்கப் பதக்கம் வென்ற வேளையில் வியட்நாமின் ஹோங் தான் தாய் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கிலீன் அன்ட் ஜெர்க் பிரிவில் தாய்லாந்தின் போர்ன்சாய் லொப்சி 191 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய சாதனையைப் படைத்தார்.