Homeகுற்றவியல்அபராதத்தில் ஏன் பாகுபாடு: பிரமுகர்களுக்கு சிறப்பு சலுகையா?

அபராதத்தில் ஏன் பாகுபாடு: பிரமுகர்களுக்கு சிறப்பு சலுகையா?

கோலாலம்பூர், மே. 6-

நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக 8 நாட்களை சிறையில் கழித்த ஒரு தாய் அதே குற்றத்திற்காக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் மகளுக்கும் மருமகனுக்கும் தல 800 ரிங்கிட் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக பி லிசா கிறிஸ்டினா 30 நாட்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என முதலில் தீர்பளிக்கப்பட்டது. பின்னர் அவர் 1,000 ரிங்கிட் அபராதம் செலுத்தி சிறையிலிருந்து வெளியேறினார்.
இதனிடையே அந்த அம்னோ தலைவரின் மகளுக்கும் மருமகனுக்கும் விதிக்கப்பட்ட அவதாரம் தம்மை விட குறைவானது என சுட்டிக்காட்டி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாம் 8 நாட்கள் சிறையில் இருந்தபோது தமது மகனை பார்க்க முடியாமல் மோனது மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும மிகவும் வெட்கமாக உணர்ந்ததாகவும் அவர் கூறினார். தம் தாயிடம் 1,000 ரிங்கிட் கடனாக பெற்று அபராதத்தை செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரபலங்களின் உறவினர்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை தம்மை விட அதிக அளவில் மீறியுள்ளதாக கூறிய லிசா, அவர்களுக்கு ஏன் குறைவான அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் தேவை என்றும் கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more