சுங்கை சிப்புட் மே 13-
நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் சுங்கை சிப்புட் பகுதியில் வசதி குறைந்தவர்களுக்கு இந்திய தம்பதியர் தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றனர்.
இந்தியர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் சீனர்கள் பூர்வ குடியினர் களுக்கும் இவர்கள் உதவிப் பொருட்களை வழங்கி வந்துள்ளனர்.

விமானி செல்வா அவரின் துணைவியார் வழக்கறிஞர் இந்திராணி இருவரும் அத்தியாவசிய பொருட்களையும் உணவு பொருட்களையும் வழங்கினர்.
அதோடு முன்னிலைப் பணியாளர்களுக்கும் இது போன்ற உதவிகள் வழங்கப்பட்டதாக வழக்கறிஞர் இந்திராணி தெரிவித்தார்.


