அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் ​​‘குற்றம் குற்றமே’ எனும் தமிழ் குற்றவியல் தொடர்!

கோலாலம்பூர், மே 13-

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் 17 மே முதல், இரவு 8 மணிக்கு பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ப்ரிமியர் காணவுள்ள குற்றம் குற்றமே எனும் மலேசியாவின் முதல் உள்ளூர் தமிழ் குற்றவியல் தொடரை கண்டு மகிழலாம்.

சந்தோஷ் கேசவன் இயக்கத்திலும் மற்றும் டத்தோ பரமசிவம், முன்னாள் பேரா மாநில காவல்துறைத் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் காவல்துறைத் துணை ஆணையர் (Deputy Chief Police Officer of Perak and former Deputy Superitendant of Police) விவரிப்பிலும் மலர்ந்த குற்றம் குற்றமே 12 அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது.

கொள்ளை, கார் திருட்டு, கடத்தல், கோபத்தால் சாலையில் ஏற்படும் கடுங் குற்றங்கள் என உள்ளூர் சமூகத்தினர் சம்பந்தப்பட்ட பல கடுமையான குற்றங்களை ஒட்டி இவ்வத்தியாயங்கள் மலர்கின்றன. ஒவ்வொரு 30 நிமிட அத்தியாயத்திலும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் வேகமான, மனதைக் கவரும் கதையோட்டம் உள்ளது.

அனைத்து வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய அத்தியாயத்துடன் மலரும் குற்றம் குற்றமே தொடரை தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிப்பதோடு எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.

அத்தியாயம் 1: மற்றொருவரின் பானத்தில் போதைப்பொருள் சேர்த்தல்
2020 மே 17, 8pm ஒரு இளம் பெண்ணின் பானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டவுடன் ஏற்ப்பட்ட பின் விளைவுகள்

அத்தியாயம் 2: வட்டி முதலைகள் / ஆ லோங்
2020 மே 24, 8pm ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினர் வட்டி முதலைகளுடன் சிக்கி பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்

அத்தியாயம் 3: போதைப்பொருள் விற்பனை
2020 மே 31, 8pm இளம் வயதுச் சிறுவர்கள் போதைப்பொருட்களை உட்கொள்ள காவல்துறையினரால் முறியடிக்கப்படுகின்றனர்

அத்தியாயம் 4: குண்டர் கும்பல்
2020 ஜூன் 7, 8pm குண்டர் கும்பலில் ஈடுபடும் பள்ளிச் சிறுவர்களைப் பற்றியக் கதை

அத்தியாயம் 5: ஏமாற்றும் ஆடவன்
2020 ஜூன் 14, 8pm ஒரு நடுத்தர வயது இளைஞர் காதல் மோசடியில் ஈடுபடுகிறார்

அத்தியாயம் 6: கற்பழிப்பு
2020 ஜூன் 21, 8pm ஒரு இளம் பெண் ஒரு பையன் விரித்த வலையில் விழுகிறாள்

அத்தியாயம் 7: கார் திருட்டு
2020 ஜூன் 28, 8pm கார் திருட்டுகளில் RFID பயன்பாடு மற்றும் காவல்துறையினர் அவற்றை முறியடிக்கும் வழிகள்

அத்தியாயம் 8: கொள்ளை
2020 ஜூலை 5, 8pm ஒரு வங்கி கொள்ளை மற்றும் கொள்ளையர்களைக் காவல்துறையினர் முறியடித்ததைப் பற்றியக் கதை

அத்தியாயம் 9: கோபத்தால் சாலையில் ஏற்படும் கடுங் குற்றங்கள்
2020 ஜூலை 12, 8pm ஒரு ஓட்டுநரின் சாலை சீற்றம் மற்றும் அதன் பின் விளைவுகள்

அத்தியாயம் 10: வீட்டை உடைத்தல்
2020 ஜூலை 19, 8pm ஒரு வீடு கொள்ளையர்களால் உடைக்கப்பட்டு, ஒரு குடும்பம் அவர்களால் கவனிக்கப்படுகிறது

அத்தியாயம் 11: ஆட்கடத்தல்
2020 ஜூலை 26, 8pm ஒரு மில்லியனர் கடத்தப்பட, கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் முயற்சிக்கின்றனர்

அத்தியாயம் 12: வழிப்பறிக் கொள்ளை
2020 ஆகஸ்ட் 2, 8pm வழிப்பறி கொள்ளையர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை அறியாத ஒரு ஜோடியைத் தாக்குகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here