முகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது! மாமன்னர்!

கோலாலம்பூர், மே. 18-

நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவை டான்ஶ்ரீ முகிடின் யாடின் கொண்டிருந்த காரணத்திற்காகத் தாம் அவரை பிரதமராக நியமித்ததாக மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் பதவி விலகுவதாக கூறியபோது தாம் அவரை பதவி விலக வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் மாமன்னர் கூறினார். ஆனால் மகாதீர் பதவி விலகுவதில் உறுதியாக இருந்ததாகவும் மாமன்னர் தமது உரையில் குறிப்பிட்டார்.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அச்சூழ்நிலையில் மாமன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித் தனியாகச் சந்தித்து விளக்கம் கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்சூழ்நிலையில் டான்ஶ்ரீ முகிடின் யாசினுக்கு போதுமான பெரும்பான்மை இருப்பது உறுதி செய்யப்பட்ட காரணத்திற்காக அவரை தாம் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததாக மாமன்னர் கூறினார்.

நாடு தற்போது பல்வேறான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. அதனால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டவர், இனியும் நிலைதன்மையற்ற அரசியல் சூழ்நிலை தொடரக்கூடாது என கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here