மாட்ரிட், ஆக. 26- 

உலகின் தலைசிறந்த கால்பந்து ஆட்டக்காரரான பார்சிலோனாவின் லியொனல் மெஸ்சி, இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான மென்சஸ்டர் சிட்டியில் இணையக்கூடுமென இங்கிலாந்து முன்னணி நாளேடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

தமது கால்பந்து பயணத்தை பார்சிலோனா அணியில் தொடங்கிய மெஸ்சி அவ்வணியின் முன்னணி ஆட்டக்காரராக உருமாறினார். 2001ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்கு விளையாடி வரும் மெஸ்சி, 2004ஆம் ஆண்டு பார்சிலோனா அணியின் முதல் வரிசையில் இடம்பிடித்தார்.

உச்ச நட்சத்திரமாக இருந்தபோதும் கூட வேறு எந்த அணிக்கும் மாற்றலாகிச் செல்லாத மெஸ்சி, பாயன் மூனீச் அணியிடம் பார்சிலோனா படுதோல்வி அடைந்த போது, தாம் அவ்வணியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

பார்சிலோனாவின் முன்னாள் நிர்வாகி பெப் குவாடியலோ தற்போது மென்சஸ்டர் சிட்டியின் நிர்வாகியாக இருப்பதால், மெஸ்சி அவ்வணியில் இணையக்கூடுமெனப் பரவலாகப் பேசப்படுகின்றது.

இதனிடையே. மெஸ்சிக்கு மென்சஸ்டர் யுனைடெட் அணியும் அவ்வாட்டகாரரை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.