Homeஇந்தியா/ ஈழம்“கருப்பன் குசும்புக்காரன்” புகழ் நடிகர் தவசி மரணம்

“கருப்பன் குசும்புக்காரன்” புகழ் நடிகர் தவசி மரணம்

மதுரை, wavampar 23:- 

தமிழ் திரைப்பட நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவு பலருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக் கோளாறு காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த புகைப்படம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இணயத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாத வகையில் மிகவும் மெலிந்து காணப்பட்டார்.

அவரது மறைவை அடுத்து பலர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவரது “ஆத்மா சாந்தியடையட்டும்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய நேரப்படி இரவு 08:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கிய “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தில் பஞ்சாயத்து காட்சியில் கம்பீரமாக இரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசிய நடிகர் தவசி, பல படங்களில் கிராமத்து கோவில்களின் பூசாரி ஆகவும் “கருப்பன் குசும்புக்காரன்” என்னும் வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

– Zee Hindustan News

spot_img

latest articles

explore more