spot_img
6.7 C
London
spot_img
Home மலேசியா கல்வி லீ சோங் வேய் 50 மாணவர்களுக்கு வரைப்பட்டிகைக் கணினிகளை வழங்கினார்.

லீ சோங் வேய் 50 மாணவர்களுக்கு வரைப்பட்டிகைக் கணினிகளை வழங்கினார்.

0
361

புக்கிட் மெர்தாஜாம் | பிப்பரவரி 5:-

புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் வசதி குறைந்த 50 மாணவர்களுக்கு வரைப்பட்டிகை எனப்படும் டேப்லட் வகை கணினியை நாட்டின் முன்னணி பூப்பந்து விளையட்டு வீரர் லீ சோங் வேய் வழங்கி உதவியுள்ளார்.

இவ்விவரத்தை புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்தீவன் சிம் சீ கியோங் இன்று தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Asal Cek Mau Pi Sekolah எனும் கட்டாயமாகப் பள்ளிக்குச் செல்லும் திட்டத்தைப் பற்றிக் கேள்விப் பட்டதும் தன்னை லீ சோங் வேய் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு உதவும் தமது எண்ணத்தைத் தெரிவித்ததாக சிம் கூறினார்.

நமது வீரர் வந்து காப்பாற்றுகிறார் – “Wira kita datang menyelamat!”எனக் குறிப்பிட்டு இவ்விவரத்தைத் தனது முகநூல் பக்கத்தில் சிம் அறிவித்துள்ளார்.

Samsung Tab A8 எனும் கணினியை 50 மாணவர்களுக்குத் தாம் வழங்குவதாக சோன் வேய் கூறியுள்ளார்.

அவர் விளாஇயாட்டுக் களத்தில் மட்டும் வீரர் அல்ல. அதற்கு அப்பார்பட்டும் உண்மையான வீரர். நன்றி ! எனத் தனது முகநூலில் சிம் குறிப்பிட்டுள்ளார்.

இல்லிருப்புக் கற்றலில் அதற்கானக் கருவிகள் இல்லாமல் சிரமப்படும் தகுதி வாய்ந்த  மாணவருக்கு அந்தக் கணினி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 லீ சோங் வேய் புக்கிட் மெர்தாகாம் ஜிட் சின் சீனப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களுக்கான இந்தத் திட்டம் கடந்த சனவரி 24ஆம் நாள் தொடங்கப்பட்டது. புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் மக்களுக்கு கல்வியில் உதவிகளை வழங்க இந்தத் திட்டம் முன்னெடுகக்ப்பட்டது.

வீட்டுப் பாடங்களை அச்சடித்துக் கொடுப்பது,
இலவச இயங்கலை வகுப்புகள்,
இணைச் சேவைக்கானத் தொகை அதிகரிப்பு,
புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரால் மாணவர் தத்தெடுப்புத் திட்டம்,
இலவச மடிக்கணினி
ஆகிய ஐந்து முக்கியப் பிரிவுகள் இந்தத் திட்டத்தின் உள்ளடக்கங்கள் ஆகும்.

இந்தக் கல்வித் திட்டத்தை முன்னெடுத்த புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்தீவன் சிம்முக்கும் அதற்கு உதவிய நாட்டின் பூப்பந்து வீரர் லீ சோங் வேய்க்கும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு மற்றவர்களும் இதே போன்ற முன்னெடுப்பை நாடு முழுவதும் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.