Homeஅரசியல்ரோஸ்மா விடுதலை செய்யப்படுவாரா அல்லது தற்காக்க வாய்ப்பு வழங்கப்படுமா ? பிப்பரவரி 18 தெரிய வரும்...

ரோஸ்மா விடுதலை செய்யப்படுவாரா அல்லது தற்காக்க வாய்ப்பு வழங்கப்படுமா ? பிப்பரவரி 18 தெரிய வரும் !

கோலாலம்பூர் | பிப்பரவரி 10:-

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் இரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் விடுதலை செய்யப்படுவாரா அல்லது அவர் தற்காத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுமா என்பது எதிர்வரும் பிப்பரவரி 18 ஆம் நாள் தெரியவரும் . ரி.ம. 187.5 மில்லியன் கையூட்டு கேட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதத்தையும் தற்காப்பு குழுவினரின் வாதங்களையும் கேட்டதை அடுத்து நீதிபதி முகமட் ஸைனி மஸ்லான் இந்தத் தேதியை முடிவு செய்தார்.

ரோஸ்மா மன்சூர் தரப்பு வழக்கறிஞர்களாக ஜக்ஜித் சிங்கும் அக்பெர்டினும் பிரதிநிதிக்கின்றனர். அரசு தரப்பு குழுவுக்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் தலைமை ஏற்கிறார்.

ஜெபாக் ஹோல்டிங்ஸ் சென். பெர், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சாம்சுடீனிடமிருந்து கையூட்டாக ரி.ம.. 187.5 மில்லியனைக் கோரியதாக மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை ரோஸ்மா மீது சுமத்தப்பட்டுள்ளது.

சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் உள்ள 369 கிராமப்புறப் பள்ளிகளுக்கு ரி.ம. 1.25 பில்லியன் மதிப்புள்ள சூரியத் திட்டங்களை அந்நிறுவனம் பெற அவர் இந்த நிதியைக் கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

2016 முதல் 2017 வரை சைடியிடமிருந்து ரி.ம. 6.5 மில்லியன் கையூட்டு வாங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

spot_img

latest articles

explore more