கோலாலம்பூர் | ஜூன் 18 :-

மலேசியாவில் தொழிலாளர்கள்  சந்திக்கும் பிரச்சனைக்கு சட்டம் 446 உள்ளது. அது அவர்களின் நலன், உரிமை போன்றவற்றைக் காக்கின்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.

தமிழகத் தொழிலாளி வேலாயுதம் மலேசிய உணவக உரிமையாளர் மீது வைத்தக் குற்றச் சாட்டு தொடர்பாக இன்று இரவு 8.30க்கு மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணனும், தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான நேர்கொண்ட பார்வையின் தொகுப்பாளர் இலக்ஷ்மி இராமக்கிருஷ்ணனும், குற்றம் சாட்டிய வேலாயுதமும் இயங்கலை வாயிலாக நேரடியாகச் சந்தித்தனர்.

தமிழகத் தொழிலாளர்கள் துன்புறுத்தல் தொடர்பாக அண்மைய நடவடிக்கைகள் குறித்து அதில் பேசப்பட்டது. அதில் தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டம், மலேசிய அரசாங்கத்தின் உதவி, நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் விளக்கமளித்தார்.

1. சட்டம் 446
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச தங்குமிட வசதியும் இதர வசதிகள் சட்டம் 1990

இந்தச் சட்டம் கடந்த செப்தெம்பர் மாதம் 1 ஆம் நாள் முதல் நடப்புக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டத்தின்படி ஒவ்வொரு தொழிலாளியின் தங்குட அறை எந்த அளவுக்கு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும், படுக்கையின் மெத்தை எந்த அளாவுக்கு மொத்தமாக இருக்க வேண்டும், எந்த மாதிரியான சுகாதார வசதிகள் தொழிலாளிகளின் தங்குமிடத்தில் வழங்கப்பட வேண்டும் ஆகியவற்றோடு, வெளிநாட்டுத் தொழிலாளிகளின் கடப்பிதழை முதலாளிகள் பிடித்து வைக்ககூடாது போன்றவைகள் அதில் அடங்கும். அதற்காக அவர்கள் தங்குமிடத்தில் பூட்டுடன் கூடிய அலமாரி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

Akta_446

2. Working for Workers எனும் செயலி

மேலும், கடந்த மே 1ஆம் நாள் தொழிலாளிகளுக்குத் தொண்டு செய்வோம் எனும் Working for Workers எனும் செயலி மனிதவள அமைச்சால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டுத் தொழிலாளிகள் தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சிக்கலில் இருக்கும் தொழிலாளர்கள், தாங்கள் பணிபுரியும் வேலையிடத்தில் என்ன பிரச்சனை நடக்கின்றது அல்லது தொழிலாளர்களுக்கு என்ன அநியாயம் நடக்கின்றது என்பது குறித்தத் தகவலை இருந்த இடத்திலேயே மலேசிய மனிதவள அமைச்சுக்கு இந்தச் செயலி வழி அனுப்பலாம். மேலும், அங்கு இருக்கும் நிலவரத்தையும் சூழ்நிலையையும் படம் படித்து அனுப்பலாம்.

இது குறித்த நடவடிக்கையை அவ்வமைச்சு 7 நாட்களுக்குள் எடுக்கும். அப்படி அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறும் பொழுது, ஏழாவது நாள் அந்த விவகாரம் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணனின் நேரடிப் பார்வைக்கு வந்துவிடும்.

wfw

3. தமிழக அரசின் அங்கீகாரத்துக்குப் பிறகே மலேசியாவில் வேலை

இன்றையத் தமிழக அரசு அயல்நாட்டுத் தமிழர்களுக்கென ஒரு துறையை உருவாக்கியுள்ளது. இனி மலேசியாவுக்கு வேலைக்கு வருகிறர்வர்கள் தமிழக அரசின் ஏதாவது ஒரு துறையின் அங்கீகாரம் பெற்ற பின்னரே மலேசிய வர வேண்டும் எனவும், மலேசியாவில் மனிதவள அமைச்சின் அடுத்தக்கட்ட அங்கீராத்திற்குப் பின்னரே அவர்கள் மலேசியாவில் வேலை செய்ய முடியும் என்பது போன்ற வழிமுறையை உருவாக்கப் பலதரப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு அமைச்சரே நேரடியாக தமிழக அரசைத் தொடர்பு கொண்டு பேசுவதாகவும் கூறினார்.

4. புதிதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள வரைமுறை

மலேசியாவுக்கு இனி வரக் கூடிய வெளிநாட்டுத் தொழிலாளிகளுக்குக் கட்டாயமான சிறப்பு அறிமுகப் பயிற்சி வழங்கப்படும். இந்த48 மணி நேரப் பயிற்சியை மலேசிய அரசே நடத்தும்.

HRDF எனப்படும் மலேசிய மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் அதனை நடத்தும்.

இந்த நாட்டிற்குப் பிழைக்க வந்து விட்டோம். நமக்கு எந்த உரிமையும் இங்கு இல்லை எனப் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்துலக தொழிலாளர் மன்றத்தின்படி அனைத்துத் தொழிலாளர்களும் சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. அதைக் கொண்டுதான் ஒரு நாட்டின் தரம் முடிவு செய்யப்படுகிறது.

இந்த நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளிகளின் உரிமை என்ன ? இவர்கள் என்னென்ன செய்யலாம் ? இவர்களுக்குப் பிரச்சனை ஏற்படும் தருவாயில் யாரைத் தொடர்பு கொள்ளலாம் ? தற்போது அறிமுகம் கண்டிருக்கும் செயலி வாயிலாக எவ்வாறு தங்கள் பிரச்சனைகளைக் கலையலாம் ? போன்றவைகள் அதில் தெளிவு வழங்கப்படும்.

Thoughts from a seminar | Science | AAAS

5. e-WAGES எனப்படும் மின்னியல் முறையில் ஊதியம்

இதனை மனிதவள அமைச்சு இன்னும் சில மாதங்களில் இதனை நடப்புக்குக் கொண்டு வர உள்ளது.

ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்குள் ஒரு தொழிலாளியின் ஊதியப் பணம் அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றால் உடனடியாக அரசுக்குத் தகவல் கிடைத்து அதனை விசாரணை செய்து தீர்வு வழங்கப்படும்.

Malaysia to Launch E-Wages System to Ensure Workers Get Paid On Time - HR  in ASIA

ஆக, கோவிட்-19 பெருந்திற்றில் இருந்து உலக நாடுகள் விடுபட்டப் பின்னர் மலேசிய மனிதவள அமைச்சு தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு இஇரு நாடுகளும் இணைந்து மலேசியாவுக்குத் தமிழகத்தில் இருந்து வேலைக்கு வருகிறவர்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்து இடைத்தரகர்கள் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் என மனிதவள அமைச்சு உறுதியளிப்பதாக அமைச்சர் அத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.