Homeமலேசியாகம்பாரில் மூன்று வீடுகள் தீப்பிடித்தச் சம்பவத்தில் ஆடவர் பலி !

கம்பாரில் மூன்று வீடுகள் தீப்பிடித்தச் சம்பவத்தில் ஆடவர் பலி !

கம்பார் | 23/7/2021 :-

இங்குள்ள கம்போங் பாடாங் தேம்பாக்கில் நேற்று நள்ளிரவு நடந்த தீவிபத்தில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்.

மூன்று வீடுகளை உட்படுத்திய அத்தீச் சம்பவத்தில் 50 வயது என நம்பப்படும் அகமாட் புசிர் கஸாலி உயிரிழந்த வேளையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட அவரது மனைவி ஙா டிமா தாமினை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பேரா மாநில தீவணைப்பு – மீட்புப் படையினரின் பேச்சாரளர் தெரிவித்தார்.

தமது தரப்புக்கு இரவு 11.48 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் தாப்பா தீவணைப்பு – மீட்புப் படையினரோடு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

தீக்கு இரையான 20×30 அடி பரப்பளவு கொண்ட வீடுகளில், முதல் வீடு 90% நாசமடைந்ததாகவும், இரண்டாவது வீடு 80 % நாசமடைந்ததாகவும் மூன்றாவது வீடு 40 நாசமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடுமையானப் போராட்டத்திற்குப் பிறகு அத்தீ அதிகாலை 3.33 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது.

spot_img

latest articles

explore more