தோக்கியோ | 24/7/2021
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட 32வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நேற்று அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியது. 1896 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உலகத் தரம் வாய்ந்த போட்டி, நேற்று ஜப்பான் நாட்டின் தலைநகரான தோக்கியோவில் அதன் தொடக்கவிழாவைக் கண்டது.
பெருந்தொற்றுக் காலத்தில் இப்போட்டி நடத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சிறிய அளவில் ஏற்பாடு செய்திருந்தாலும், அதன் பிரம்மாண்டத்திற்குக் குறைவே இல்லை.

சிறிய அளவு எனக் குறிப்பிடும்போது. அத்தொடக்க விழாவில் 1,000க்கும் குறைவான முக்கிய வருகையாளர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் 68,000 பேர் அமரக் கூடிய அந்த விளையாட்டரங்கத்தில் சில ஆயிரம் பேர் மட்டும் கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்களின் உற்சாகமும் ஆராவாரமும் மிகுதியாகவே இருந்தது.
ஓராண்டு காலம் ஒத்திவைக்கப்பட்ட இந்தப் போட்டியில் பங்கெடுக்க இருக்கும் மொத்த விளையாட்டாளர்கள் எண்ணிக்கையும் குறைந்திருந்தது. தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்ற அனைவரும் முகக்கவரி அணிந்திருந்தனர்.
ட்ரோன் அணிவகுப்பு, வானவேடிக்கை, இசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் அப்போட்டியில் பங்கெடுக்கும் நாடுகளின் அணிவகுப்பும் இடம்பெற்றது. 206 நாடுகள் பங்கெடுத்த அந்த அணிவகுப்பின்போது இறுதியாக உபசரணை நாடான ஜாப்பான் அரங்கிற்குள் நுழைந்தது.

ஒலிம்பிக் உறுதி மொழிக்குப் பின்னர் ஜப்பான் நாட்டு மன்னர் நருஹித்தோ தொக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். ஒலிம்பிக் கொடியேற்றம், வரவேற்புரை ஆகியவற்றுக்குப் பிறகு ஒலிம்பிக் பந்தம் ஒளியூட்டப்பட்டது. சில கண்கவர் படைப்புகளும் அவ்விழாவை மெருகேற்றின.
‘உணர்ச்சிகளால் ஒன்றிணைவோம்’ எனும் இம்முறை ஒலிம்பிக் போட்டியின் கருபொருளுக்கு ஏற்றவாறு உறுதிமொழ் அங்கமும் அமைந்தது. இம்முறை 2 விளையாட்டாளர், இரு பயிற்றுநர், இரு நீதிபதி ஆகியோரைத் தலைமையாகக் கொண்டு அவ்வங்கம் அரங்கேறியது.
தொடக்கவிழா அணிவகுப்பில் 13 பங்கேற்பாளர்களைக் கொண்ட மலேசிய அணி 177 வது அணியாக அரங்கினுள் நுழைந்தது.
ஒட்டு மொத்த மலேசிய மக்களின் நம்பிக்கையின் உருவமாக அவர்கள் பெருமையுடன் அரங்கினுள் காலடி எடுத்து வைத்தார்கள்.

மலாயாவின் வீர அடையாளமான ஹங் துவா போன்ற மிடுக்கான உடையை ஆண்களும் அதே கம்பீரமான உடைபோன்றே பெண்களும் அணிந்திருந்தனர்.
மலேசியாவின் தன்னிச் சிறப்பு அடையாளம் கொண்ட உடையை ஷா ஆலாம் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வரைகலை புலம் வடிவமைத்திருந்தது.

நாட்டின் தேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங்கை நாட்டின் பூப்பந்து வீரர்களான லீ ஸீ ஜியாவும் கோ லியு யிங்கும் பெருமையுடன் ஏந்தி வந்தனர்.
வடிவியல் அடிப்படையில் இலக்கை நோக்கி முன் செல்வதைக் குறிக்கும் முக்கோண வடிவில் நாட்டின் 13 விளையாட்டு வீரர்களும் அணிவகுத்து முதன்மை மேடையை நோக்கி வந்தனர்/
ஜாலோர் கெமிலாங்கின் நான்கு வண்ணங்களான மஞ்சள் நீலம், சிவப்பு, வெள்ளை ஆகியவற்றைக் கொண்டு நமது நாட்டு விளையாட்டு வீரர்கள் அணிந்திருந்த ஆடை உருவாக்கப்பட்டது.
இதற்கு முன்னர் தோக்கியோ கடந்த 1964 இல் ஒலிம்பிக் போட்டியை ஏறு நடத்தியது. இம்முறை நிறைவு விழாவின்போது ஒலிம்பிக் பந்தத்தை 2024 உபசரணை நாடான பிரான்சிடம் ஒப்படைக்கப்படும்.

பிரம்மாண்டம், கோலாகலம், உற்சாகம் ஆகியவற்றுடன் தோக்குயோ ஒலிம்பிக் போட்டுயின் தொடக்க விழா அமைந்திருந்தாலும், “ஒலிம்பிக்கைக் காட்டிலும் உயிர்களே மேலானவை” எனும் வாசகத்தை ஏந்தியவாறு ஒலிம்பிக்கை நிறுத்துக்கும் எனக் கூச்சலிட்டு தொடக்க விழா அரங்கைச் சுற்றி மறியலும் நடந்தது.
இது வரையில் ஒலிம்பிக் போட்டியில் ஈடுபடுவோரிம் 100க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தொற்றூ கண்டறியப்பட்டுள்ளது. பெருந்தொற்றூ இன்னும் பெரிய ஆபத்தான நிலையில் தான் உள்ளது.

