Homeஉலகம்தோக்கியோ ஒலிம்பிக் 2020 : பூப்பந்து கலப்பு இரட்டையர் & பெண்கள் பிரிவில் மலேசியா தோல்வி...

தோக்கியோ ஒலிம்பிக் 2020 : பூப்பந்து கலப்பு இரட்டையர் & பெண்கள் பிரிவில் மலேசியா தோல்வி ! ஆண்கள் இரட்டையர் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி !

தோக்கியோ | 25/7/2021 :-

தோக்கியோ ஒலிம்பிக் 2020இல் பூப்பந்து கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொண்ட மலேசியா தோல்வி கண்டது.

முசாஷினோ ஃபோரெஸ்ட் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற அப்போட்டியில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணையினர் ஹாங்காங்கின் தாங் சூன் மான் – ட்சே யிங் சுவேட் இணையினரிடம் 18-21, 21-10, 16-21 எனும் புள்ளிகளின் அடிப்படையில் D குழுவுக்கான ஆட்டத்தில் தோல்வி கண்டனர்.

இதனால், அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை மலேசியா இழந்தது.

இதனிடையே, பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் கியேசியா போலீ – அப்ரியானி ராஹாயு இணையினரிடம் முதன்முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்கிய மலேசியாவின் சோவ் மேய் குவான் – மெங் யேன் இணையினர் 14-21, 17-21 நேரசி செட்களில் A பிரிவு குழுக்களுக்கான ஆட்டத்தில் தோல்வியுற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் நாட்டின் ஏரன் சியா – சோ வூய் யிக் இணையினரின் வெற்றி சற்றே மகிழ்ச்சியை அளித்துள்ளது. 24-22, 21-15 எனும் நேரடி செட்களில் உலகத்தர வரிசையி, 7வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சோய் சொல்க்யூ – சியோ செயுங்ஜே வை D பிரிவு குழுக்களுக்கான ஆட்டத்தில் வெற்றி கண்டு அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

உலகத் தர வரிசையில் 9வது இடத்தில் இருக்கும் அந்த மலேசிய இணையினர் நாளை 26/7/2021 ஆம் நாள் நடக்கவிருக்கும் அடுத்தச் சுற்றில் இந்தோனேசியாவின் முகம்மட் அஹ்சான் – ஹெண்ட்ரா செத்தியாவான் இணையினரைச் சந்திக்கவுள்ளனர். அவ்வாட்டம் மலேசிய அணிக்கு மிகக் கடுமையானதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

latest articles

explore more