கோலாலம்பூர் | 12/8/2021 :-
அம்னோவின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடியிடமிருந்து விலகி இருப்பது என ம.இ.கா.வின் தலைமைத்துவம் எடுத்த முடிவு அதன் உறுப்பினர்களைக் குழப்பமடையச் செய்கிறது என ம.இ.கா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் குமார் அம்மான் கூறினார்.
ஸாஹிட் போலவே பிரதமட் மகியாதீன் முகம்மது யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்ளாத ம.இ.கா.வின் முடிவு கட்சியின் எதிர்காலத்தை அடகு வைப்பதற்கு ஒப்பாகும் எனச் சித்தரித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அரசாங்கத்தைச் சரிவர நடத்தாத பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கு ஆதரவாக நிற்பது குறித்து ம.இ.கா.வின் பல உறுப்பினர்களுக்குக் குழப்பமாகவே உள்ளது என குமார் அம்மான் கூறினார்.
தற்போது மாமன்னருக்கு இரண்டகம் செய்த அரசாங்கம் எனத் தேசியக் கூட்டணி சித்தரிக்கப்படுகிறது.
எனவே, எதிர்காலம் இல்லாத (ம.இ.கா.) கட்சியில் இருந்து தாம் விலகுவதாக குமார் அம்மான் அறிவித்துள்ளார்.
அம்னோ இல்லாமல் மலாய்க்கார வாக்காளர்களின் ஆதரவை ம.இ.கா.வால் பெற முடியுமா ? என குமார் அம்மான் கேள்வி எழுப்பினார்.
ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் ஜி பழனிவேலுக்கு ஆதரவானவர் குமார் அம்மான்.


