Homeஅரசியல்அம்னோவின் தலைமைத்துவம் வெறும் பராமரிப்பாளர் மட்டுமே;முடிவுகள் செல்லாது -ROS ! ...

அம்னோவின் தலைமைத்துவம் வெறும் பராமரிப்பாளர் மட்டுமே;முடிவுகள் செல்லாது -ROS ! தேசிய முன்னனி உச்சமன்ற பதவிகளை உறுப்புக்கட்சிகளிடம் ஒப்படையுங்கள் – ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர் | 12/8/2021 :-

அம்னோ தலைமைத்துவம் மற்றும் உச்சமன்ற பதவிகள் அனைத்தும் ஜூன் மாதம் 30ஆம் தேதியோடு காலாவதியாகி விட்டதால் அம்னோ தலைமைத்துவம் எடுக்கும் எந்த முடிவுகளும் செல்லாது என்று ROS எனப்படும் சங்கங்கள் பதிவிலாகா அறிவித்து விட்டதால் தேசிய முன்னனி தலைமைத்துவ பொறுப்பு உறுப்புக் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ROS செய்துள்ள அறிவிப்பு முக்கியபான ஒன்றாகும் என்பதால் இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்க தேசிய முன்னனி உச்சமன்ற கூட்டம் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்று தேசிய முன்னனி தலைமையை கேட்டுக் கொண்டிருக்கிறோம். தேசிய முன்னனியின் இலக்கு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கபட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

அம்னோவின் 2018/2021க்கான தலைமைத்துவம் மற்றும் உச்சமன்ற பதவிகளுக்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் தேதியோடு காலாவதியாகி விட்டதாக ROS அறிவித்துள்ளது. இதனால் அம்னோ தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகள் எதுவும் செல்லாது. அதுபோலவே தேசிய முன்னனி தலைமைத்துவத்தில் பதவி வகிக்கும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் எடுக்கும் முடிவுகள் செல்லாது என்பதால் தேசிய முன்னனி கூட்டத்தில் இதுகுறித்து விரைவில் விவாதிக்கப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

தேசிய முன்னனி உச்சமன்றத்தில் முக்கியப் பதவிகளில் அம்னோ தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் செல்லாது என்பதாலும் அவை சட்டரீதியாக சவால்மிக்கதாக அமையலாம் என்பதாலும் தேசிய முன்னனி உச்சமன்ற கூட்டத்தை கூட்டி, அந்த பதவிகள் ஏகமனதாக அதன் உறுப்புக்கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அம்னோவின் தற்போதைய தலைமைத்துவம் வெறும் பராமரிப்பு தலைமைத்துவம் மட்டுமே. எந்த முடிவும் செல்லாது என்று ROS அறிவித்துள்ளதால் தேசிய முன்னனி உச்சமன்ற பதவிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

தேசிய முன்னனி தலைவராக அம்னோ தலைவராக இருக்கும் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி பதவி வகித்து வருகிறார். அம்னோவின் 2018/2021க்கான தலைமைத்துவ பதவிகள் அனைத்தும் ஜூன் 30ஆம் தேதியோடு காலாவதியாகி விட்டதாக ROS அண்மையில் அறிவிருத்திருந்தது. இதனால் அம்னோ எடுக்கும் முடிவுகள் செல்லாது என்றும் ROS தலைமை இயக்குநர் ஜஸ்ரி காசிம் கூறியிருந்தார்.

தேசிய முன்னனியில் உள்ள நான்கு உறுப்புக்கட்சிகளில் ம.இ.காவும் ஒரு உறுப்புக்கட்சியாக உள்ளது. இதில் மேலும் அம்னோ, மசீச, PBRS ஆகிய கட்சிகள் உறுப்புக்கட்சிகளாக இருக்கின்றனர். தேசிய முன்னனியில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் முக்கியப் பதவிகளாக கருதப்படுகின்றன. தேசிய முன்னனிக்கு மொத்தம் 42 நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன. இதில் அம்னோவுக்கு 38 நாடாளுமன்றங்களும் ம.இ.காவுக்கு 1 நாடாளுமன்றமும் மசீசவுக்கு 2 நாடாளுமன்றங்களும் PBRS கட்சிக்கு 1 நாடாளுமன்றமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more