Homeமலேசியா12 – 17 வயது இளையோருக்குத் தடுப்பூசி போடப்படும் ! – கைரி

12 – 17 வயது இளையோருக்குத் தடுப்பூசி போடப்படும் ! – கைரி

கோலாலம்பூர் | 13/8/2021 :-

தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 12 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட இளையோருக்குத் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை மிக விரைவில் தொடங்கப்படும் என அதன் ஓருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்தார்.

தொடக்கக் கட்டமாக ஆபத்தான தொடர்நோய் கொண்டிருப்பவர்களுக்கும் அதன் பின்னர் மருத்துவச் சிக்கல் இல்லாதவர்களுக்கும் வயது மூப்பின் அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என அவர் கூறினார்.

இந்த வழிமுறை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவின் பரிந்துறையின் அடிப்படையில் வழிநடத்தப்படும்.

இதன் தொடர்பில் அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more