Homeஅரசியல்பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் : ஜிபிஎஸ் ஆதரவு !

பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் : ஜிபிஎஸ் ஆதரவு !

பெட்டாலிங் ஜெயா | 18/8/2021 :-

பிரதமர் வேட்பாளராக தேசிய முன்னணியின் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு சரவாக் ஒன்றிணைந்த கட்சி – GPS ஆதரவளிக்கும் என ஜிபிஎஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜிபிஎஸ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்துள்ளது.

கொள்கை அளவில் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு ஆதரவளித்தாலும், ஆதரவுக் கடிதத்தை இன்று நண்பகலில் நடக்கவிருக்கும் ஜிபிஎஸ் கட்சிக் கூட்டத்திற்க்குப் பிறகே வழங்கப்படும் என சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினரும் Parti Pesaka Bumiputera Bersatu (PBB) கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமான வான் ஜுனைடி துவான்கு ஜஃபார் தெரிவித்தார்.

ஜிபிஎஸ்-இன் முக்கிய உறுப்புக் கட்சி PBB.

இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மிக முக்கியமான மூத்தத் தலைவர். பலராலும் விரும்பப்படுகிறவர். கடந்த 17 மாதங்களாக கோவிட்-19 தொற்றைக் கையாள்வதில் பரந்த அனுபவமிக்கவர் என வான் ஜுனைடி துவான்கு ஜஃபார் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றாஇக் கையாளும் முறை குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்தாலும், அவை யாவும் வெளீயிருந்து வருகின்றவை. ஆனால், களத்தில் இருந்து நேரடியாகக் கையாண்ட அனுபவம் என்பது வேறு. அதனை அமைச்சரவையில் இருந்து கொண்டு சமாளித்தவர் என வான் ஜுனைடி துவான்கு ஜஃபார் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more