கோலாலம்பூர் | 18/8/2021 :-
பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை ஒரே ஒரு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் ஆதரிக்க வில்லை என பாடாங் பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் ஸாஹிடி ஸைனுல் அபிடின் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த முடிவு எந்த வகையிலும் கட்சியின் ஒட்டுமொத்த முடிவை பாதிக்காது என அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான ஸாஹிடி குறிப்பிட்டார்.
மற்ற அனைவரும் பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கான ஆதரவுக் கடிதத்தில் கையொப்பமிட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.


