Homeமலேசியாசிகாம்மாட்டில் இரு முக்கியமான சாலைகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டன !

சிகாம்மாட்டில் இரு முக்கியமான சாலைகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டன !

சிகாம்மாட் | 1/1/2022 :-

நேற்உ தொடங்கி இங்குள்ள 2 முக்கியமான சாலைகள் வெள்ளம் காரணமாக அனைத்து வகையான வாகனப் பயன்பாட்டுக்கு மூடப்பட்டுள்ளன என மாநிலப் பொதுப் பணி, போக்குவரத்து, பொது வசதிக்கான செயற்குழுத் தலைவர் முகம்மட் சோலிஹான் பட்ரி தெரிவித்தார்.

கம்போங் புக்கிட் தெம்புரோங்கில் உள்ள ஜாலான் ஜாபியில் அரை மீட்டர் வரையில் வெள்ளம் ஏற்பட்டத்தால் ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் மூடப்பட்டுள்ளது.

அதே சமயம், கம்போங் சிம்பாங் லோய்யில் உள்ள ஜாலான் பங்சாரில்  0.6 மீட்டர் வரையில் வெள்ளம் எற்பட்டதால் 100 மீட்டர் வரையில் மூடப்பட்டுள்ளது.

ஜாலான் ஜாபி சாலைக்கு மார்று இல்லை எனக் குறிப்பிட்ட அவர், ஜாலான் பங்சாருக்மு மாற்றாக ஜாலான் கோலா பாயா பாலாய் பாடாங் சாலையைப் பயன்படுத்தப் பொது மக்களை முகம்மட் சோலிஹான் பட்ரி கேட்டுக் கொண்டார்.

அங்கு ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். எனவே, பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு குறித்து அதிகாரத்துவத்தினரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அவர் குறிப்பிட்டார்.

இன்று நண்பகல் 12.00 மணி வரையில் அம்மாவட்டத்தில் 192 குடும்பங்களைச் சேர்ந்த  658 பேர் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

spot_img

latest articles

explore more