பெட்டாலிங் ஜெயா | 1/1/2022:-
உலு மூடா ஆற்றில் வழி பினாங்கு பெற்ற தண்ணீருக்கானக் கட்டணத்தை ‘வசூலிக்க’ வழக்கறிஞர் குழுவை அமைத்துள்ளது கெடா என அம்மாநில முதல்வர் முகம்மட் சனுசி முகம்மட் நோர் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் பினாங்கு மாநிலம் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் எனவே, கெடா மாநில அரசு அதனை மிகவும் கண்டிப்பாக கருதுவதைக் காட்ட நினைப்பதகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வழக்கறிஞர் குழுவொல் மூத்த வழக்கறீஞரையும் நியமிக்க இருப்பதாகக் கறிய சனுசி, மூடா ஆற்றின் வழி பினாங்கு மாநில பெற்றத் தண்ணீருக்கானக் கட்டணத்தை எப்படியும் ‘வசூலித்து’ விட வேண்டும் எனத் தாம் மிக உறூதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
சட்டப்படி பினாங்கிற்கு எதிரான அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர் குழு முடிவு செய்யும் எனவும் இது தமது எதிர்ப்பார்ப்ப மட்டும் இன்றி கெடா மாநில மக்களின் எதிர்ப்பார்ப்பும் கூட எனக் கூறினார்.
இவ்விவகாரத்தை அப்படியே விட்டு விட நாம் கற்கால மக்கள் ல்ல. கெடா மாநில தண்ணீர் வாரியமான Lembaga Sumber Air Negeri Kedah (LSANK)வுக்கு டாருல் அமான் நீர் நிறுவனம் கட்டணம் செலுத்துகிரது.
எனவே, பினாங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் (பினாங்கு மாநில அரசு) இதனை அலட்சியம் செய்கிறார்கள் என்றார் சனுசி.
முன்னதாக, பினாங்கு மாநில நீர் விநியோக நிறுவமான Perbadanan Bekalan Air Pulau Pinang (PBAPP) உலு மூடா ஆற்றில் இருந்து தண்ணீர் பெற்று வந்த நிலையில், அதற்காக ஆண்டுக்கு ரிம 50 மில்லியன் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என கெடா மாநில அரசு பினாங்கு மாநில அரசுக்கு எழுத்துப்பூர்வமாகக் கோரியது.
அவ்வாறு பெறப்பட்ட தண்ணீரானது மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இருந்து பெற்றதால் அஃது அனைத்துலக சட்டம் – உரிமை விவகாரம் என பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சர் சோவ் கோன் இயோ கெடாவின் கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை.


