பெட்டாலிங் ஜெயா | 6/4/2022 :-
பெட்டாலிங் ஜெயா ஜாலான் டெம்ப்ளரில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் அதனை ஒட்டியுள்ள, ஜாலான் சுங்ஙை ஜெர்னி புக்கிட் பிந்தாங் மலாய்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் பேருந்துக்கும் தங்களின் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரையில் காத்திருக்கும் வேளையில், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக நடப்பதற்கு, அவர்களின் நலன்கருதி பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் அமைத்துத்தந்த அந்த இரும்பு தடுப்பின் மேலே, ஜாலான் சுங்ஙை ஜெர்னி சாலையில் வசிக்கும், சில பொறுப்பற்ற வீடுகளில் உள்ள நபர்கள் உள்ளாடைகளையும் அருவருப்பான துணிகளையும் காயப்போடுவது கண்டிக்கத்தக்கச் செயலாகும்.

அதேவேளையில், கடந்த ஈராண்டுகளாக கொரோனா – கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக, அரசின் கட்டுப்பாட்டுக்கு இணங்க மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்து, இம்மாதம்தான் பல கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் பள்ளிகள் வளக்க நிலைக்குத் திரிம்பியுள்ளன.

எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி, பெட்டாலிங் செயா நகராண்மைக் கழகம், பள்ளி மாணவர்கள் கைபிடித்து நடக்க அமைத்துத் தந்த இந்த தடுப்பு வேலியில் தொடர்ந்து இதுபோன்று துணிகளைக் காயப்போடுவதை நிருத்திக்கொள்ள வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் நினைவுருத்தினர் என பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாக. பஞ்சு பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் கூறினார்.






