spot_img
21.2 C
London
spot_img
Home மலேசியா கல்வி இடைநிலைப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு! டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை

இடைநிலைப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு! டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை

தாப்பா, ஏப்ரல் 29-

தாப்பா நாடாளுமன்றத்தை சார்ந்துள்ள இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நோன்பு பெருநாள் அன்பளிப்பை வழங்கினார்.

அத்தொகுதியில் ஆயர் கூனிங், செண்டாரிங், ஸ்ரீ தாப்பா, பூயோங் அடில், ஹமிட் கான், தாப்பா படிவம் 6 கல்லூரி, டத்தோ பங்லிமா பெராங் கீரி, பத்தாங் பாடாங், பீடோர் ஆகிய 9 இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த படிவம் 5, 6 மாணவர்களை வெள்ளிக்கிழமை காலை சந்தித்தார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு அம்மாணவர்கள் அனைவருக்கு அன்பளிப்புகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் தாப்பா வட்டாரத்தில் உள்ள இடைநிலைப்பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கியதாகவும் அப்போது பள்ளியில் உள்ள பல பிரச்சினைகளை பள்ளி நிர்வாகத்தினர் தம்மிடம் கூறியதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இதில் பள்ளியில் சீரமைப்பு பணிகளுடன் மண்டபம் கட்டுப்படுவதும் அடங்கும்மென்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“இப் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உரிய தீர்வை காண்பேன்” என்று மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.